இந்தோனேசியா ஓபன் போட்டியின் காலிறுதியில், இந்தியாவின் பிவி சிந்து ஜப்பானின் நோசாமி வோக்குராவைத் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோசாமி வோக்குராவை, ஐந்தாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பிவி சிந்து எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சிந்து 21 – 14, 21 – 7 என்ற நேர் செட்டுகளில் நோசாமி வோக்குராவைத் வீழ்த்தினார். இதன்மூலம் இந்த வருட தொடக்கத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபனில் தன்னை தோற்கடித்த வோக்குராவை பழி தீர்த்தார். இந்நிலையில் இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யூபேவை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்.
Discussion about this post