எதிரி நாட்டு ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் அதிநவீன எஸ் 400 ரக ஏவுகணைகள், துருக்கிக்கு அனுப்பப்படும் வீடியோ காட்சிகளை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
ரஷ்ய தயாரிப்பான எஸ் 400 ரக ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, இரண்டு கட்டங்களாக ஏற்கனவே துருக்கிக்கு அனுப்பப்பட்டு விட்டன. இந்நிலையில் 3வது கட்டமாக துருக்கிக்கு அனுப்புவதற்காக, எஸ் 400 ரக ஏவுகணை விமானத்தில் ஏற்றப்படும் வீடியோவை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மீதமுள்ள ஏவுகணைகள் குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை துருக்கி வாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post