பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் பதிவேற்றம் ஆகும் போட்டோ, வீடியோக்களுக்கு இதய வடிவிலான லைக்ஸ் ஆப்ஷன்கள் என வண்ணமயமாக காட்சியளிக்கும். இதனால் மற்றவர்கள் பதிவிடும் பதிவுகளுக்கு விழும் லைக்ஸ் எண்ணிக்கை இதனை உபயோகிப்பவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை தருவதாக தகவல் வெளியானது. இதனால் பணம் கொடுத்து லைக்குகளை பெறும் அவலநிலைக்கு செல்கின்றனர். தற்போது இந்த பிரச்சனையை தீர்க்க இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
அதன்படி இனி பயனாளர்கள் இடும் பதிவுகளுக்கு வரும் லைக்குகள் உள்ளிட்ட தகவல்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.
இந்த சோதனை கனடா நாட்டில் முதலில் கோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பிரேசில், ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், அயர்லாந்து, நியூசிலாந்து நாடுகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் கூறுகையில், சோதனை முயற்சியாகவே பயனாளர்களின் எண்ணங்களை ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post