முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி நிறுவனம் தனது அடுத்த மாடலாக ரெட்மி K20 ப்ரோ-வை களத்தில் இறக்கியுள்ளது. இந்த மொபைல்களில் குறிப்பிட்ட சில எண்ணிக்கையிலான மொபைல்கள் ஸ்பெஷல் வெர்ஷனாக வெளியாகியுள்ளது. இதில் ஸ்பெஷல் என்ன என்று கேட்கிறீர்களா? விலை தான்…இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.4.80 லட்சம்…ஆனால் சாதாரண ரெட்மி K20 ப்ரோ விலை ரூ.30000 வரை விற்பனையாக உள்ளது.
வழக்கம் போல பல ஸ்மார்ட்போன்கள் அப்டேட்கள் இருந்தாலும் இந்த ஸ்பெஷல் வெர்ஷனின் பின்பக்கத்தில் தங்க முலாம் பூசப்பட்டு அதில் வைரக்கற்கள் பதித்த “K” என்ற எழுத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.
ரெட்மி மொபைல் நிறுவனம் இந்தியாவில் கால்பதித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி அதனை சிறப்பிக்கும் வகையில் இந்த “ரெட்மி K20 ப்ரோ”வின் ஸ்பெஷல் வெர்ஷன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ரெட்மி K20 ப்ரோ” சிறப்புகள்:
Android processor Cpu: குவால்காம் ஸ்நப்டிராகன் 855
Android Version: Android 9.0 Pie
Display Size: 16.23 Inch
RAM: 6 GB
Memory: 64 GB
Front Camera: 20MP பாப் அப் செல்ஃபி கேமரா
Back Camera: 48MP+8MP+13MP
Battery Capacity: 4000mAh
Discussion about this post