பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் பழமையான அருங்காட்சியகம் உள்ளது. இங்கு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தால் பலத்த சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட அருங்காட்சியகத்தை பார்க்க அனுமதிக்கக் கோரியும், அதனை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருங்காட்சியகத்திற்கு அவர்கள் உள்ளே செல்ல முயன்றபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பெப்பர் ஸ்பிரேவை தெளித்தும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
Discussion about this post