பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் இனவெறி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கையாண்டு வரும் நிலையில், பிறநாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களுக்கான சலுகைகளை குறைக்கும் முயற்சியில் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பிக்கள் குறித்து டிரம்ப் கூறியிருக்கும் கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவில், முற்போக்கு சிந்தனையுள்ள ஜனநாயக கட்சி பெண் எம்.பி.க்கள், எந்த நாடுகளிலிருந்து வந்தார்களோ அந்த நாடுகள் எவ்வளவு மோசமாக, ஊழல் நிறைந்ததாக உள்ளது என்பதை பார்க்க வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் தாங்கள் நடத்தும் அமெரிக்க மக்களின் அரசை, உலகின் சக்தி வாய்ந்த அரசை விமர்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் இந்த இனவெறி கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்துவருகின்றன. மேலும், ஜனநாயக கட்சி தலைவர்களும், சக பெண் எம்.பி.க்களும் டிரம்பை கடுமையாக சாடி வருகின்றனர்.
Discussion about this post