மதுரை அருகே அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் மணிமண்டபம் பொழுதுபோக்கு இடமாக அல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் செயல்படும் என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். மணிமண்டப திறப்பு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், காமராஜர் குறித்து அடுத்த தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில், மணிமண்டபம் விளங்கும் என்று குறிப்பிட்டார்.
Discussion about this post