மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வாகன நிறுத்துமிடம் கட்ட, பள்ளம் தோண்டிய போது, பாதாள சிறைச்சாலை போன்ற அமைப்பு தென்பட்டது..
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 30அடியில் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது, திடீரென 10 அடி நீளம் கொண்ட கருங்கல் தூண் வெளிவந்துள்ளது. இந்த பணி நடைபெறும் மேற்பகுதியில் ராணி மங்கம்மாள் காலத்தில் சிறைச்சாலை இருந்ததால், பாதாள சிறையாக இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தூண்கள் திடீரென வெளிவந்துள்ளதால் மதுரை மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Discussion about this post