அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அசாம் முதலமைச்சரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
அசாம் மாநிலத்தில் பலத்த மழையால் 20 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அசாம் மாநில முதல் அமைச்சர் சர்பானந்தா சோனோவாலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாகவும், நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், தான் நேரடியாக கண்காணித்து வருவதாகவும் சோனோவால் கூறியுள்ளார். அசாமிற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்கும் என அப்போது அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
Discussion about this post