அமமுக மகளிர் இணை செயலாளர் கவிதா சசிக்குமார் முதலமைச்சர் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், அமமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில், அமமுகவில் மகளிர் இணை செயலாளராக இருந்த கவிதா சசிக்குமார், முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இனைந்தார். தனது கணவருடன் முதலமைச்சரை சந்தித்த அவர், அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டார்.
இதையடுத்து தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அவர்கள் வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வின் போது, கழக மருத்துவ அணி துணை செயலாளரும், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான மணிகண்டனும் உடனிருந்தார்.
Discussion about this post