கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலமும், தும்கா-சாய்பாசா கருவூலம் தொடர்பான மோசடி வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் தண்டனை அனுபவித்து வருகிறார். முதுமை மற்றும் உடல்நலப் பிரச்சனைகளை காரணம் காட்டி, அவர் ஜாமின் கோரியிருந்தார். இந்நிலையில் லாலுவுக்கு ஜாமின் வழங்கி, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் லாலுபிரசாத் ஜாமின் கேட்ட போது, அவர் வெளியில் வந்து கட்சிப் பணியில் ஈடுபவார் என சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post