ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக நிலுவையில் உள்ள இந்த மனுக்கள் மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தர விடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழக அமைச்சரவை போதுமான நடவடிக்கைகளை எடுத்து விட்டதாகவும், ஆளுநர் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.
Discussion about this post