எலக்ட்ரிக் வாகனங்களுக்கும், பேட்டரி வாகனங்களுக்கும் பதிவு கட்டணம் இல்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பயன்படுத்தாத வாகனங்களுக்கு சலுகைகள் தரும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும் என மக்ககளவையில் சில எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, எலக்ட்ரிக் மற்றும் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் இல்லை என்றும், காற்று மாசு அடைவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு மின் வாகனங்களுக்கு பதிவு கட்டண விலக்கு தந்துள்ளது என்றும் கூறினார். இதன்மூலம் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் நுகர்வோருக்கு சுமார் 4 ஆயிரம் ரூபாய் சேமிப்படையும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
Discussion about this post