நுரையீரல் பழுதாவதால் ஏற்படும் நோய்க்கு சி.ஓ.பி.டி. என்று பெயர், தமிழில் இதனை நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்று கூறலாம். உலகெங்கும் மனிதர்களை அதிகம் கொல்லும் நோய்களில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்த சி.ஓ.பி.டி. நோய். இந்த நோய்க்கான காரணங்கள் குறித்து இங்கிலாந்தில் 3 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளி வந்தன. இதன்படி,
காற்று மாசுபட்ட சுற்றுச் சூழலில் வாழும் நபர்களின் நுரையீரலானது காற்றில் உள்ள நுண்ணிய மாசுக்கள் மற்றும் நைட்ரஜன் பெராக்சைடு வாயு ஆகியவற்றை சுழற்சி செய்வதால் விரைவில் முதுமையை அடைகிறது.
மாசடைந்த காற்றை ஒருவர் சுவாசிக்கும் போது நுரையீரலின் வேலை இரண்டு மடங்காகிறது, அதனால் ஓராண்டுக்கு மாசடந்த காற்றை சுவாசிக்கும் போது நுரையீரலுக்கு 2 ஆண்டுகள் வரை வயது கூடுகிறது. அந்த நிலையில் அவருக்கு நுரையீரல் அடைப்பு நோய் பாதிக்கும் வாய்ப்பும் 3 மடங்குகள் அதிகரிக்கின்றது.
இந்த காற்று மாசுக்கள் பெட்ரோல், டீசல் வாகனப் புகைகளாலும், தொழிற்சாலைப் புகைகளால், புகைப் பிடிக்கும் பழக்கத்தினாலுமே காற்றில் கலக்கின்றன. இந்த மூன்றுவித புகைகளையும் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் மனிதர்கள் இப்போது உள்ளனர்.
வீடுகளைப் பொருத்தவரையில், புகைக்கும் பழக்கம் உள்ளவர்களின் வீடுகளில் உற்ற காற்றுமாசு வெளியே உள்ள கற்றுமாசை விடவும் 4 மடங்கு அதிகமாக உள்ளது. இது வீட்டில் உள்ள புகைக்காதவர்களையும் பாதிக்கின்றது. யாருமே புகைபிடிக்காத வீடுகளில் காற்றுமாசு வெளியே உள்ளதில் பாதி அளவுக்குதான் உள்ளது. புகைப்பவர்கள் வீட்டுக்கு வெளியே சென்றாலும் புகை வெளியே செல்லாது என்பதால் இதில் பெண்கள் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது கவனிக்கப்பட வேண்டியது.
மேலும், கார்கள், தொழிற்சாலைகளின் மூலம் பயன் பெறுபவர்கள் பெரும்பாலும் வசதியுள்ள வகுப்பினராகவே இருக்கும் நிலையில், இவற்றின் மாசுக்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்கள்தான் என்பது இதில் இன்னொரு அதிர்ச்சி!.
இது தவிர மாசடைந்த பணிச் சூழல், சிறு வயதில் சத்தான உணவுகள் கிடைக்காமல் இருந்தது, நோய் பாதிப்புகளின் போது சரியான சிகிச்சை எடுக்காதது – உள்ளிட்ட காரணங்களும் கூட நுரையீரலின் முதுமையை அதிகப்படுத்தும் என்று இந்த ஆய்வு கூறுகின்றது.
Discussion about this post