லண்டனில் நடைபெறும் பாரா காமன்வெல்த் ஜூடோ போட்டிக்கு, எடப்பாடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தேர்வாகியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள செட்டி மாங்குறிச்சி பகுதியை சேர்ந்த பழனிசாமி-அம்மாசி தம்பதியினருக்கு, சுபாஷினி, மணிமேகலை என்ற மகள்களும், ராஜ் என்ற மகனும் உள்ளனர். இதில், சுபாஷினி அங்குள்ள அயோத்திப்பட்டிணத்தில் இயங்கி வரும் பார்வை குறைபாடு உள்ள விடுதியில் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், 7 ஆண்டுகளாக ஜூடோ கலையில் மிகுந்த ஆர்வத்தோடு கற்றுவந்த இவர், தேசிய அளவில் பல்வேறு தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இதனையடுத்து இங்கிலாந்தில், செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் பாரா காமன்வெல்த் ஜூடோ போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது எடப்பாடியை சேர்ந்த பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post