அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் வரம்பு மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் கணிசமாக உயர்த்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் ஈரான் செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தை அந்நாடு திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில், இரு நாடுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அணு சக்தி திட்டத்தை ஈரான் ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்க வலியுறுத்திய நிலையில், ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இதனையடுத்து பிரான்ஸின் உயர் ஆலோசகர் இம்மானுவேல் பொன்னி ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் முஹம்மது ஜாவத் ஜரீஃப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், அணு சக்தி திட்டத்தை ஈரான் ரத்து செய்யவில்லை என்றால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் கணிசமாக உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post