சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே சமயம், வெள்ளி விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 26 ஆயிரத்து 112 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், நேற்று 3 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்பனையான 22 கேரட் தங்கம் 5 ரூபாய் உயர்ந்து, இன்று 3 ஆயிரத்து 269 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து இன்று ஒரு சவரன் 26ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தை பொருத்த வரை, ஒரு கிராம் 5 ரூபாய் உயர்ந்து 3ஆயிரத்து 426 ரூபாயாகவும், ஒரு சவரன் 40 ரூபாய் உயர்ந்து 27ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொருத்தவரை, 100 ரூபாய் குறைந்து கிலோ 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post