கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் அவகாச கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததால், சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால் ஜீவஜோதி என்ற பெண்ணின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படையை ஏவி கொலை செய்தார். இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு பூந்தமல்லி நீதிமன்றம் கடந்த 2004 ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, கடந்த ஜூலை 7 ஆம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா,மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் ராஜகோபாலை உடனே சரணடைய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜாரான ராஜகோபாலை சிறையில் அடைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் ராஜகோபால், மற்றொரு குற்றவாளி ஜனார்தனன் ஆகியோரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தனர். சோதனைக்கு பின்னர், இருவரும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post