காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு பதவி விலக கோரி மாநில முழுவதும் போராட்டம் நடத்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியமைத்து வரும் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு ஆதரவளித்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால், அம்மாநிலத்தில் பெரும் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், முதலமைச்சர் குமாரசாமி ஆட்சி தொடர்வது கேள்வி குறியாகியுள்ளது. இதற்கிடையே எதிர்கட்சியான பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் குமாரசாமி பதவி விலக கோரி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆதரவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மேலும், சில எம்.எல்.ஏ க்கள் ஆதரவை திரும்ப பெற உள்ளதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் கோல்ஃப் ஷேர் ஹோட்டலுக்கு மற்றப்பட்டுள்ள நிலையில், குமாரசாமி ஆட்சி தொடர்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
Discussion about this post