உள்ளாட்சித்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதன்படி, சென்னை மற்றும் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என்றார். சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் தெரு விளக்குகளை தொலை தூரத்தில் இருந்து கண்காணிக்கும் முறை 46 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க 15 கோடி செலவில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும், சென்னை நகரில் கண்ணாடி இழை கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறப்பு திட்டமாக பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு முறையில் கீழ்நிலை பெட்டகம் அமைக்கும் பணி 200 கோடியில் செயல்படுத்தப்படும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவம் வகையில் 2 ஆயிரம் இடங்களில் 12 கோடியே 52 லட்சம் செலவில் மழைநீர் சேகரிக்கும் கிணறுகள் அமைக்கப்படும், பேரூராட்சி பகுதிகளில் 360 கிலோ மீட்டர் நீளமுள்ள பல்வேறு சாலைகள் 200 கோடியில் அமைக்கப்படும் போன்ற பல முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்தார்.
Discussion about this post