நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்ற நடிகரின் விஷாலின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப் பதிவு கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வாக்குகளை எண்ண உத்தரவிடும்படி நடிகர் விஷால் தரப்பு கோரிக்கை விடுத்தது.
இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்தது. மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Discussion about this post