சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு ஆகிய 3 நாடுகளுக்கு செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 4ஆம் தேதி வரை சைப்ரஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் குடியரசுத் தலைவர், அந்நாட்டு அதிபர் நிகோசை சந்தித்து இருதரப்பு வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி பேச உள்ளார். பின்னர், 6ஆம் தேதி வரை பல்கேரியா நாட்டில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனைத்தொடர்ந்து செக் குடியரசு செல்லும் குடியரசுத் தலைவர், அதிபர் மிலோஸ், பிரதமர் ஆண்டிரெஜ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
Discussion about this post