திருப்பதிக்கு வந்த குஜராத் தம்பதியினர் வளர்ப்பு பூனை தொலைந்ததால் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலேயே தங்கியுள்ளனர், மேலும் பூனை கிடைக்கமால் திரும்பி செல்ல மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
குஜராத், சூரத் நகரை சேர்ந்த ஜேஸ்பாய், மினாபீ தம்பதியினருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பூனையுடன் வந்துள்ளனர். சொந்த ஊர் செல்ல ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்தவர்களின் பூனை தொலைந்தது. இதனால் மனமுடைந்தவர்கள் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பூனை கிடைக்கமால் திரும்பி செல்ல மாட்டோம் என கண்னீர் மல்க தெரிவித்தனர் .
Discussion about this post