கலிபோர்னியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள, ரிட்ஜ்கிரெஸ்ட் நகரின் அருகே மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இது கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கம் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரிலும் பல பகுதிகளில் உணரப்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கியதுடன், சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டது.
வியாழனன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானபோதே, அமெரிக்க புவியியல் துறையினர் அதைவிட பெரிய அளவில் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பெரும் சேதம் ஏற்பட்டு, மக்கள் வீதிகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் அமெரிக்காவில் 117 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் Surveyவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
Discussion about this post