பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் குறைந்துள்ளது.
நடப்பாண்டிற்கான நிதிநிலை பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாக, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கமானது, சவரனுக்கு 304 ரூபாய் விலை குறைந்து, 26 ஆயிரத்து 248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, 22 கேரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 281 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம், சவரனுக்கு 304 ரூபாய் விலை குறைந்து, 27 ஆயிரத்து 504 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 438 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து, 40 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post