கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி வடிநிலக் கோட்டத்திற்கு உட்பட்ட 6 வாய்க்கால்கள் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள பள்ளாளையம் வாய்க்கால் குடிமராமத்து பணியை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர், தமிழகத்தின் அனைத்து நீர்வழிப் பகுதிகளையும் தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில், அமராவதி வடிநிலக் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளபாளையம் வாய்க்கால், கோயம்பள்ளி சோமூர் வாய்க்கால், திருமாநிலையூர் வாய்க்கால், மாயனூர் மணவாசி வாய்க்கால், சின்னதாராபுரம் வாய்க்கால் மற்றும் நஞ்சை காளக்குறிச்சி வாய்க்கால் ஆகிய 6 வாய்க்கால்கல் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
Discussion about this post