பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா வாங்கும் 36 ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இந்த பிரச்சனைக்கு விவாதம் மூலம் தீர்வு காண்பதற்கான சிறந்த இடம் நாடாளுமன்றம் தான் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு விவாதம் நடத்த விரும்பவில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று அவர் கூறினார். குறிப்பாக, ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிறுவனமான டசால்ட், இந்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தை ஏன் தேர்வு செய்யவில்லை என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
Discussion about this post