சென்னை புதுப்பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி பலகோடி ரூபாய் பணத்தை மோசடி செய்தவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுப்பேட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவர் 15 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் காவலர்கள் பலரும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஏலச்சீட்டு பணத்தை வாங்கி சென்னையின் பல இடங்களில் நிலம் வாங்கிய கண்ணன், வட்டிக்கு விட்டும் பணம் சம்பாதித்துள்ளார்.
இந்நிலையில் 300 பேரின் பணத்துடன் கண்ணன் மாயமாகி விட்டார். புகாரின் அடிப்படையில் எழும்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கட்டி ஏமாந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post