தமிழக அரசை பற்றி அவதூறாக பேசிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி அதிமுகவினர் ஆளுநர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மக்களையும், தமிழக அரசு பற்றியும் அவதூறாக பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து ஆளுநர் மாளிகை அருகே அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும், ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post