தூத்துக்குடி மாவட்டத்தில் 87 அரசு பள்ளிகளிகளில் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 87 அரசு பள்ளிகளுக்கு தேவையான தொலைக்காட்சி பெட்டிகள், செட் டாப் பாக்ஸ் கருவிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவர்கள் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை காண்பதற்கு 24 மணி நேர கல்வி சேனலை அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கல்விச்சேனல் மூலம் மாணவர்களின் தரம் மேம்படும் என்றார்.
Discussion about this post