2019-20ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியம் நாடாளுமன்றத்தில் வியாழனன்று தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவது வழக்கம். அதன்படி, 2019-20 ம் ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். வேளாண்மை, வேலைவாய்ப்பு, முதலீடுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக இந்த அறிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post