வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தலா 9சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதே போல் திண்டிவனத்தில் தலா 7 சென்டி மீட்டர் மழையும், தேன் கனிக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் தலா 6சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படம் என்றும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 33டிகிரி செல்சியஸ் முதல், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post