பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.
குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தற்போது மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மத்திய அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக குஜராத் செல்லும் அமித் ஷா பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து வியாழனன்று ஜெகன்நாதர் கோவிலில் நடைபெறும் மங்கல ஆரத்தில் அவர் கலந்துகொள்கிறார்.
Discussion about this post