கோவை மாவட்டத்தில் போதுமான மழை பெய்யாத நிலையிலும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகளின் கருத்துக்களை கேட்ட மாவட்ட ஆட்சியர் ராசமணி, குடிமராமத்து பணிகளுக்காக கோவை மாவட்டத்திற்கு ஏழரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தாண்டுக்கான குடிமராமத்து பணிகள் ஒரிரு நாட்களில் தொடங்கும் என்றும், போதுமான மழை பெய்யாத நிலையிலும் இருக்கும் நீர் ஆதாரத்தைக் கொண்டு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்தார்
Discussion about this post