தற்போதுள்ள விதியின்படி தந்தையின் பெயரை குறிப்பிடுவது கட்டாயமாக உள்ளது. பான் கார்டு பெற தந்தையின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற விதியை தளர்த்திக் கொள்ள பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து வருமான வரித்துறை விதி எண் 114ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு கொண்டுள்ளது. அதன்படி தாயுடன் இருப்பவர்கள் தந்தையின் பெயரை குறிப்பிடுவது அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விமர்சனங்களையும் கோரிக்கைகளையும் வரும் 17ஆம் தேதி வரை அனுப்பலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post