15 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் 2,500 மரக்கன்றுகளை நட்டு பசுமை பணியில் ஈடுபட்டனர். மதுரை காமராஜர் பல்கலை கழகம் சார்பாக அழிந்து வரும் மரங்களை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 15 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகளை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் நட்டனர். இவற்றை மாணவர்களே பராமரிப்பார்கள் என்று துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் பல்கலை கழகத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post