திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றி வந்த 8 சரக்கு லாரிகளுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது. இதன் வழியாக தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் போக்குவரத்திற்கு அனுமதி உள்ளது. இந்நிலையில், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் திம்பம் மலைப்பாதையில் விபத்துக்குள்ளாவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது தொடர்கதையாக உள்ள நிலையில், 4.2 மீட்டர் உயரம், 3.3 மீட்டர் அகலத்திற்கு அதிகமாக பாரம் ஏற்றிச்செல்லும் சரக்கு லாரிகளை கண்டறிய உயரத்தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பாரம் ஏற்றி வந்த 8 லாரிகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து அதிகாரிகள், மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.
Discussion about this post