சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடிகளை காவல்துறை கைது செய்தனர்..
பிரபல ரவுடி தென்னரசு கொலை உட்பட 40 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடியான அம்பேத்கர், தற்போது தென்னரசுவின் தம்பி பாம் சரவணனையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தன் கூட்டாளிகள் ஸ்டீபன் மற்றும் குகன் ஆகிய இருவருடன் பல்லாவரத்தில் பதுங்கியிருந்து திட்டம் தீட்டி வந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்த போலீசார், மூவரையும் துப்பாக்கி முனையில் வளைத்துப்பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Discussion about this post