சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் பள்ளிகளை மிஞ்சும்வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி செய்துத்தரப்பட்டுள்ளதற்கு பெற்றோர் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வாழப்பாடி அருகே சேஷன் சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 190க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதில் மாணவ மாணவிகளுக்கு சிரமம் இருந்து வந்தது.
இதையடுத்து இந்த பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி செய்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்த கோரிக்கையை ஏற்றுள்ள தமிழக அரசு, இலவச வேன் உதவிக்கு நிதியுதவி செய்துள்ளது.
இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதனிடையே தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளி மாணவர்களுக்கு வேன் வசதி செய்துத் தரப்பட்டுள்ளதற்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Discussion about this post