நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தங்கும் விடுதிகளுக்கு கட்டணக்குறைப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர துவங்கியுள்ளனர். இந்த நிலையில் முதுமலை காப்பகத்தில் உள்ள அரசு தங்கும் விடுதிகளில் நான்கு மாதங்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியை முதுமலை வன காப்பகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதே சலுகையை பள்ளி விடுமுறை நாட்களில் அறிவித்தால் குழந்தைகளுடன் வர ஏதுவாக இருக்குமென்று சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post