திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக கோவில் பிரசாத விற்பனை நிலையம் மூலம் குறைந்த விலையில் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்யதுறை கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் கடந்த 30 ஆண்டுகளாக குத்தகைக்கு விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், பிரசாதங்கள் தரம் குறைவாக இருப்பதாகவும் புகார்கள் வந்தன.
இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் முதல் நிலை கோவில்களில் பிரசாதம் மற்றும் பஞ்சாமிர்தங்களை கோவில் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்மூலம் பிரசாத பொருட்கள் பத்து ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post