தமிழகத்தில் புகழ்பெற்ற வீணை கலைஞரான ராஜேஷ் வைத்யா 60 நிமிடத்தில், 60 பாடல்களை வாசித்து ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
பிக்பாஸ் இல்லத்தில் ஒரு போட்டியாளரான மோகன் வைத்யாவின் சகோதரர் தான் ராஜேஷ் வைத்யா.அவர்களின் குடும்பமே இசை குடும்பம்.கர்நாடக இசையில் ஊறியவர்கள் என கூறலாம்.அனைவராலும் ’வீணை மேஸ்ட்ரோ’ என அழைக்கப்படுபவர் ராஜேஷ் வைத்யா.நேற்று சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராஜேஷ் வைத்யா தனது இசை குழுவினருடன் இணைந்து 60 நிமிடங்களில் 60 பாடல்களை வாசித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி சாதனை படைத்துள்ளார்.தற்போது இவரின் இந்த சாதனை ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது.அதாவது ’ஒரு மணி நேரத்தில் அதிக இசை பிட்களை வீணையில் வாசித்தவர் என்பதே இவர் பெற்ற பட்டமாகும்.
Discussion about this post