டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் பண பரிமாற்றம் செய்ய உதவும் என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ் கட்டணத்தை ஆர்பிஜ குறைத்துள்ளது .
ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்காக வங்கிகளிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தை ரத்து செய்வதாக இம்மாத தொடக்கத்தில் ஆர்பிஜ அறிவித்தது. டிஜிட்டல் பணப்பறிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தது. மேலும் இந்த பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ் கட்டணத்தை வங்கிகள் குறைத்துள்ளன. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும் குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
Discussion about this post