மானியமில்லாத சிலிண்டரின் விலை 100 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கேற்ப அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. அதன்படி 737 ரூபாய் 50 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த மானியமில்லாத சிலிண்டர், இன்று நள்ளிரவு முதல் 637 ஆக விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மானிய விலை சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 497 ரூபாய் 37 பைசாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மானிய விலை சிலிண்டர் இன்று முதல் 497 ரூபாய் 35 ஆக விற்பனை செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post