திருச்சி முத்தரசநல்லூர் சக்தி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி, கேரள முறையில் 12 ஆயிரத்து 8 தேங்காய் உடைத்து விநோத வழிபாடு நடத்தப்பட்டது.
பூஜைக்காக சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டதுடன், சிவன் சக்தியின் மகனாக கருதப்படும் வேட்டைக்கொரு மகன் உருவம் தரையில் வரையப்பட்டது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. அதன் பின்னர் பிரபாத பூஜை, உச்ச பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆயிரத்து எட்டு தேங்காய் சமர்ப்பண நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் அத்தாவு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. ஒவ்வொரு பூஜை முடிவிலும் நம்பூதிரி ஒருவர் கையில் வாள் ஏந்தி அபிநயனத்துடன் வேட்டைகொரு மகன் உருவத்தில் வலம் வந்தார். இதைத் தொடர்ந்து 12 ஆயிரத்து 8 தேங்காய்களை நம்பூதிரி உடைத்தார். மழை பெய்ய வேண்டி நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post