இலங்கையில் தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ் மாநகர சபை முதலமைச்சர் இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இந்தக் கோபுரம் அமைப்பதன் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சினால் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் உண்டாகும் அபாயம் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தின்போது சுட்டிக்காட்டினர்.
Discussion about this post