டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும், தாய் கழகமான அதிமுக-வில் இணைந்து விடுவார்கள் என்று கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர், தாய்க்கழகமான அதிமுக-வில் இணைந்தனர். அவர்களை, கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாஸ்கரன், தினகரன் அணி கூடாரம் காலியாகி வருவதாக தெரிவித்தார். ஒரு சில தினங்களில் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அதிமுக-வில் இணைந்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post