ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் குறித்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது 2018-19ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 8 புள்ளி 2 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2017- 18ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 5 புள்ளி 8 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த 8 காலாண்டுகளில் இதுதான் அதிகபட்ச ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, சிமெண்ட், உரம், இயற்கை எரிவாயு, ஸ்டீல், மின்சாரம் ஆகிய தொழில் பிரிவுகளில் ஜூலை மாத வளர்ச்சி 6 புள்ளி 6 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post