அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள சுங்க வரிகளை திரும்ப பெறுமாறு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடியுடன் தான் பேச விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியவில் இருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கான வரியை கடந்த ஆண்டு 25 சதவிகிதம் உயர்த்தி அமெரிக்கா அறிவித்தது. இதனால் இந்தியாவின் உருக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பாதாம், வால்நட் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதித்தது. கடந்த 1 ஆம் தேதி முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்தது.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இந்தியா விதித்துள்ள கூடுதல் வரியை திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஆண்டுகளில் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்துள்ள நிலையில், தற்போது மேலும் கூடுதல் வரி விதித்துள்ளது ஏற்க முடியாதது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடியுடன் பேச தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post