முதுகுளத்தூர் அருகே, பரளை ஆற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டு அதிகரித்துள்ளதால், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மேலக்கொடுமலூர், செய்யாமங்களம், தட்டனேந்தல், பள்ளபச்சேரி, அபிராமம், உடையநாதபுரம், விளக்கனேந்தல், கண்ணத்தான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செல்லும் பரளை ஆற்றில், இரவு நேரங்களில் 30 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டி, மர்மநபர்கள் மணல் திருடுவதாக தெரிகிறது. இதனால், ஆற்றங்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் மண்ணின் தரம் குறையும் என அப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, முதுகுளத்தூர், கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post